தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும் என்றும், 27 மற்றும் 28ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மட்டும் வறண்ட மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு தெளிவான வானம் காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.