சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 டாக்டர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி டாக்டர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதியை கண்டறிந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!