தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சுமார் 13,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில். சென்னையில் 70 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும், தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.