இந்தியாவில் கடந்த சில நாட்களாக அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், லேசான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான் தற்போது வீட்டுத்தனிமையில் உள்ளேன். சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.