தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 940 ஆக உயர்ந்துள்ளது. இன்று 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பம்மலில் 17 துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.