மத்திய துணை ராணுவப்படையில் பணியாற்றும் 931 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் அதிகளவில் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய துணை ராணுவப்படையின் கீழ் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 931 பேருக்கு கொரோனா உறுதியாக இருப்பதாக மூத்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் சிலர் கொரோனா சிகிச்சை மையத்திலும், சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.