முழு ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசுகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா மூன்றாம் அலை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் மாநில அரசு இரவு மற்றும் வார இறுதி நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனவே இந்த காலத்தில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்……..