பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி

தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். டெல்லி காஜிபூரில் உள்ள பூ சந்தையில் கடந்த 14-ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி சிறப்பு காவல்துறையினர், காஜிபூர் மற்றும் காஜியாபாத் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் செல்போன், சிம் கார்டு வாங்கியவர்களின் விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். மேலும், வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் காஜிபூர் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே ஸ்லீப்பர் செல்கள்தான் வெடிகுண்டு வைத்திருக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்……..

Translate »
error: Content is protected !!