உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும்

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா படையெடுக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கென உக்ரைன் எல்லையில், ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளதோடு, பெல்லாரஸில் அந்நாட்டு ராணுவம் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.   உக்ரைன் மக்கள் தங்களை  தற்காத்துக்கொள்ள, பிரிட்டன் கூடுதல் ஆயுதங்களையும்  அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே எந்நேரமும் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும், இது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்க போவதில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, ஜெனிவாவில் நடப்பு வாரம் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான தூதரக பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது

Translate »
error: Content is protected !!