பி.எம். கேர்ஸ் நிதியில் பெறப்பட்ட நன்கொடையில் 64% பயன்படுத்தப்படவில்லை

 

 

பி.எம்.கேர்ஸ் மூலம் கடந்த 2020 மார்ச்-27 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 வரை 10 ஆயிரத்து 990 கோடி பெறப்பட்டதில், 3 ஆயிரத்து 976 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 நிதியாண்டில் 7 ஆயிரத்து 679 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டு, 2020 நிதியாண்டிலிருந்து 3 ஆயிரத்து 77 கோடி தொடக்க இருப்புத் தொகை மற்றும் வட்டி மூலம்  235 கோடி வருமானம் ஈட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த நிதியில் 495 கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாகவும், 6.6 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க ஆயிரத்து 392 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்க ஆயிரத்து 311 கோடி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!