மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சித்தாலபாக்கம் ஊராட்சி பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ், முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். அதைத்தொடர்ந்து, “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், 188 அவசர கால ஊர்திகளை மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.