டெல்லி சட்டசபையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா தாக்கல் செய்தார். டெல்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லியின் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான மனிஷ் சிசோடியா, 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிசோடியா, கொரோனா தாக்கத்திற்கு பிறகு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான தேவைகள் குறித்த விசயங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் எனத் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில், ’டெல்லி ஒதுக்கீட்டு மசோதா 2022’ ஐ அறிமுகப்படுத்துவார் என்று தெரிகிறது. டெல்லி சட்டசபையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா தாக்கல் செய்தார்.