தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டெல்லியில் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று மாலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துதல், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும், தேசிய கல்வி கொள்கை பற்றி கலந்தாலோசித்ததாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.