அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சமத்துவ நாள் ‘ உறுதிமொழியையும் ஏற்றார். மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு முதலமைச்சர் , சாதி வேறுபாடற்ற சமத்துவ சமூகம் அமைக்க பாடுபடுவோம் , சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்பது உள்ளிட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மணிமண்டப நிர்வாகத்திடம் முதலமைச்சர் ஒப்படைத்தார்.