செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையம்

சென்னை தி.நகரில் தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சார்பில் தொடங்கப்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்க கூடாது என்பதற்காக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைத்தால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வு தயாரக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதமாற்றம் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!