தமிழக அரசு வழங்கும் நிவாரணம் இலங்கை தமிழர்களுக்கு முறையாகச் சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் உள்ள அயோத்திதாசப் பண்டிதர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக் கொண்டு இருப்பதாகவும் அதை முறைப்படி கொண்டு போய் சேர்ப்போம் என்றும் கூறினார்.
தமிழக அரசின் நிவாரணம் சிங்களர்களுக்கு செல்வதை தடுக்கவில்லை என்றும் தமிழர்களுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம் என்றும் குறிப்பிட்டார். வாகன வசதி இல்லாத காலத்தில் பல்லக்கு தூக்கியதை தற்போதும் தருமபுரம் ஆதீனம் செய்ய நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்றும் சீமான் தெரிவித்தார்.