துணை வேந்தர் நியமிக்கும் மசோதா- அமைச்சர் பதில்

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தரை முதலமைச்சரே நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார்.

குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை அரசின் இசைவுடன் வேந்தர் நியமிக்கிறார். 1996-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. வேந்தர்  என்பதற்கு பதிலாக அரசு என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினாலோ, பல்கலைக்கழக நலனுக்கு ஊறுவிளைப்பதாக அரசு கருதினால் மூன்று உறுப்பினர்களை நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்ட திருத்தம் மூலம் துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இனி முதலமைச்சர்தான் துணை வேந்தரை நியமனம் செய்வார். இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த கூட்டத்தொடரிலேயே  நிறைவேற்றப்பட உள்ளது.

 

Translate »
error: Content is protected !!