ஐதராபாத்தில் இஸ்லாமிய பெண்ணை மணந்ததற்காக மணமகனை பெண் வீட்டார் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணும் இந்து மதத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இரு மாதங்களுக்கும் முன்பு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.
இருவரும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொண்டதால் கடும் கோபத்தில் இருந்த பெண் வீட்டார், நேற்று இரவு நாகராஜ் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்து அடித்து படுகொலை செய்துள்ளனர். நடுரோட்டில் பல முன்னிலையில் நடந்தேறிய இந்த ஆவண படுகொலையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.