வங்கதேச வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்துடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டாலர்களை இலங்கை அரசு கடனாக பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, வங்க தேசத்திற்கு கடன் தொகைக்கான வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசு செலுத்தவேண்டும். இந்த நிலையில் இலங்கையில் தற்போது கடும் நிதிநெருக்கடி நிலவி வரும் நிலையில் வங்கதேச வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த கால அவகாசமானது மேலும் ஒரு வருட காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.