உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அறிவித்ததை அடுத்து, உலக நாடுகள் தங்களது மக்களை நாட்டிற்கு திரும்ப அழைத்தனர். மேலும் பாதுகாப்பு கருதி கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்த தூதரகங்களும் மூடப்பட்டன. இந்தநிலையில் 3 மாத கால இடைவெளிக்கு பின், கீவில் உள்ள தூதரகத்தை அமெரிக்க திறந்து, முதற்கட்டமாக குறிப்பிட்ட சில அதிகாரிகளை பணிக்கு வரவழைத்துள்ளது. இருப்பினும் தூதரக ரீதியிலான பணிகள் தொடங்க சில காலம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் சூழலுக்கு இடையே கீவில் கடந்த மாதமே பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்களது தூதரகத்தை திறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.