இன்றைய கொரோனா பாதிப்பு 1442: குணமடைந்து 1,494 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று 1,442 பேருக்குகொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,494 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,442 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 883 பேர்; பெண்கள் 559 பேர்.மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,77,616 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 392; சென்னையில் மட்டும் மொத்தம் 2,14,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,109; இதுவரை எடுக்கப்பட்ட மொத்தம் மாதிரிகளின் எண்ணிக்கை 1,18,64,177; இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 61,610.

தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆன கொரோனா நோயாளிகள், 1,494 பேர். மொத்தம் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7,54,826 பேர். தமிழகத்தில் இன்று, வைரஸ் நோய்த்தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,681 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!