வீட்டு புகுந்த மர்ம நபர் -ஒன்பது பவுன் தங்க நகை திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்த கனகட்டள சத்தியநாராயணமூர்த்தி  கடந்த 2012ல் இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, ஒன்பது பவுன் தங்க நகைகளை திருடி சென்றார்.
இது குறித்து சத்தியநாராயணமூர்த்தி ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் சேலம் சூரமங்கலம் காவேரி நகரை சேர்ந்த சுதாகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர் இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்ட சுதாகருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
Translate »
error: Content is protected !!