அடுத்த வாரம் முதல் கொரொனா தடுப்பூசி! ஒப்புதல் தந்தது அரசு

கொரொனாவுக்கான பைசர் என்ற தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் பரவி, ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டது. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதில், அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி 95 சதவீதம் பலனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பைசர் தடுப்பு மருந்தை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இச்சூழலில், அமெரிக்காவின் பைசர் பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல், இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பைசர் தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கிய முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!