கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: பணம் கொள்ளை

சென்னை அபிராமபுரத்தில் கிறிஸ்தவ ஆலயத் தின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அபிராமபுரம், செயின்ட்மேரீஸ் ரோட்டில் புனித மினவுதல் அன்னை கிறித்தவ ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் ஆலயத்துக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். அது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாகி எபினேசர் சாந்துராஜ் (57
) அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!