தேனி மாவட்டம் தமிழ்நாடு ரூ.29.50 இலட்சம் மானியத்தினை வழங்கினார். அவர்கள் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் மூலம் ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் மூலதன மானியத்தினை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவைகளுக்கான மூலதன மானியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ், முன்னிலையில் வழங்கி தெரிவித்தாவது,
தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழில்களை மேம்படுத்தும் பொருட்டு தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.50,000/-என்ற அடிப்படையில் 518 சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.1.20 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தவர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களின் தொழில் மேம்பாட்டிற்காக, தொழில் மூலதன நிதியாக தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,000/-என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் 115 நபர்களுக்கும், கணவரை இழந்தவர்கள் 116 நபர்களுக்கும், கணவனால் கைவிடப்பட்டவர்கள் 12 நபர்களுக்கும் மொத்தம் 243 நபர்களுக்கு ரூ.37.50 இலட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்று கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன்பெற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக தலா ரூ.1 இலட்சம் வீதம் 24 நபர்களுக்கு ரூ.24 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாய உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் (விதைகள், உரம், களை எடுக்கும் இயந்திரம், பூச்சி மருந்து தெளிப்பான், உழுகலப்பை) கொள்முதல் செய்தல், உற்பத்தி செய்த விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான செலவினங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி பெறுவதற்கும்; ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1.50 இலட்சம் வீதம் 12 குழுக்களுக்கு மொத்தம் ரூ. 18.00 இலட்சமும், குழுவாக இணைந்து தொழில் புரியும் தொழில் குழுவிற்கு மூலதன மானியமாக 3 தொழில் குழுக்களுக்கு தலா ரூ. 1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ. 4.50 இலட்சமும், மேலும் ஒரு உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு ரூ. 7 இலட்சமும் ஆகமொத்தம் ரூ. 29.50 இலட்சம் நிதியுதவி இன்றைய தினம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரே சுபம், மாவட்ட செயல் அலுவலர் (தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்) ஆனந்தி, வேளாண்மைத்துறை, இணை இயக்குநர் முனைவர்.அழகு நாகேந்திரன், தோட்டக்கலைத்துறை, துணை இயக்குநர் எம்.பாண்டி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.