லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது

பெருந்தொற்று பரவி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், முதல் வைரஸ் பாதிப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவு சென்ற நபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கொச்சியில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்துதல் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!