புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தறகோரி மணு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் எடுக்காததால் நீதி மன்றத்தை நாடிய விவசாயி.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள் பட்டி சேர்ந்த விவசாயி மனோகரன்.
இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் விளைவித்த மக்காச்சோளத்தை இடைத்தரகர் இன்றி தனியார் விற்பனை செய்ய விரும்பி தனியார் விவசாயி செயலி மூலம் தான் விளைவித்த மக்காச்சோலத்தை விற்பனை செய்ய பதிவிட்ட நிலையில் கோவை மாட்டத்தை சேர்ந்த லைக்கா இம்பெக்ஸ் என்ற ஏறுமதி நிறுவனம் விவசாயி மனோகரன் மக்காச்சோலத்தை ஒரு கிலோ 20 ரூபாய்க்கு எடுத்துக்கொள்வதாக ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜலாலுதின் எனப்வர் விவசாயி மனோகரனிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் கட்ந்த ஆண்டு அவருக்கு 23875 கிலோ மக்காச்சோளத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்பணமாக 45000 ரூபாயை பெற்றுக் கொண்டு கடந்த ஆண்டு 07.07.2020 அன்று மக்காச்சோலத்தை அனுப்பிய நிலையில் விவசாயிக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணமான 432500 ரூபாய்க்கு பின் தேதி இட்ட வங்கி காசோலையை வழங்கி உள்ளார்.
இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனம் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாது திரும்பிய நிலையில் விவசாயிகள் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் பல முறை தொடர்பு கொண்டும் பாக்கி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில்
கடந்த ஆண்டு டிசம்பர் மாமதம் தேனி மாவட்ட ஆட்சியரிடம் தான் விளைவித்த மக்காச்சோலத்தை பெற்ற ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை புதிய வேளாண் சட்ட பிரிவு 8இன் அடிப்படையில் பெற்றுதர கோரிக்கை மனுக்கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுகாத நிலையில் விவசாயி மனோகரன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து தனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட விரைவு நீதிமன்றம் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஜலாலுதின் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில் கடந்த 4ஆம் தேதி லைக்கா இம்பெக்ஸ் ஏற்றுமதி உரிமையாளர் ஜலாலுதினுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றும் நேற்றும் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் காவல்நிலைய காவல்துறையினர் கோவையில் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாலர் ஜலாலுதினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில் ஏற்றுமதி நிறுவனம் தான் விளைவித்த பொருளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வந்தை தொடர்ந்து புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தரக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நட்வடிக்கை எடுக்கவில்லை எனவும்,
ஒப்பந்த நகலை மட்டும் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாத நிலையில் ஏற்றுமதியாளரிடம் பாக்கி பணத்திற்கு வங்கி காசோலை பெறப்பட்டத்தால் மட்டுமே இன்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிந்ததாகவும், இந்த ஏற்றுமதி நிறுவனம் பல விவசாயிகளிடம் அவர்கள் விளைவித்த விளைபொருட்களை பெற்று ஏமாற்றி உள்ளதாகவும் இவர் மீது கோவை மாவட்டத்தில் பல வழக்குகள் உள்ளதாக தெரிவித்ததோடு விவசாயிகள் இது போன்று பல போலியான ஏற்றுமதி நிறுவனங்களை நம்பி ஏமாற்றம் அடையாமல் இருக்க அரசு தக்க நட்வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.