வடமாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளதாக மயிலாடுதுறையில் வக்பு வாரிய தலைவர் அப்துல்ரகுமான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 3 வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது மத்திய அரசு காலம் தாழ்த்தி எடுத்த முடிவு எனவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். வட மாநிலங்களான பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கும் காரணத்தால் விவசாயிகள் பெருமளவில் இருக்கக்கூடிய அம்மாநிலங்களில் எதிர்ப்பை சம்பாதிக்க கூடிய நிலைமை உண்டாகும் என்ற அடிப்படையில் மோடி அரசு தற்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும் நீட்தேர்வு வாபஸ் வாங்க பட்டால்தான் மத்திய அரசின் மீது இருக்கக்கூடிய அதிருப்தி விலகும் எனவும் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்.