தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆளுநர் கடிதம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி, பாஜக எம்.எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வரும் நீட் தேர்வு ஒரு பலிபீடம் என விமர்சன கருத்தினை முன்வைத்தார். சட்டமுன்வடிவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க ஆதரவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நீட் விலக்குக்கு எதிரான சட்டமுன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.