தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது முடக்கப்பட்டிருந்த ஏடிஎம் சேவைகள் இன்று மீண்டும் கட்டுப்பாடுடன் தொடக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது முடக்கப்பட்டிருந்த ஏடிஎம் சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

வணிக வங்கிகள் மற்றும் வங்கிகளின் கூட்டமைப்புடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கி அமைப்பு மற்றும் அதன் சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு நபர் ஒரு வாரத்திற்கு 20,000 ஆப்கானி-யைத் தான் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!