டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் மற்றும்எதிர்க்கட்சியினரை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இந்த முறை அவர் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாமற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.