சீனாவை புறக்கணித்த கனடா

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கனடாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு கொண்ட்து. இந்த நிலையில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவுடன் இணைந்து  ஆஸ்திரேலியாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை  தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்தது. தற்போது பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!