உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு

திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார்.மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மலர் தூவி அவரை…

கம்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் துபாய் செல்ல தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவி வழங்கினார்

துபாயில் நடைபெறவிருக்கும்  ஊனமுற்றோருக்கான Divyang Premier League ( DPL) கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி (சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்) சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேனி மாவட்டம்  கம்பம், தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்  தூபாய் சென்று விளையாட போதிய நிதியுவியின்றி சிரமப்படும்…

டாடா காப்பி  தொழிற்சாலை நிறுவனத்தில் 5வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  வைகைஅணை சாலையில்  டாடா காப்பி தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் நிறந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்,…

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பொன்னையா பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: திருநின்றவூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய ஏரியின் கரையை ஒட்டி பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு…

காஞ்சி பாலாற்றில் கொத்து கொத்தாக மீன்கள்: அள்ளிச் செல்லும் கிராம மக்கள்

மூன்றாண்டுகள் கழித்து நீர்வரத்து கண்ட பாலாற்றில் கொத்துக் கொத்தாக மீன்களை மடை கட்டி கிராம மக்கள் அள்ளிச் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.…

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கோவை அருகே மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி

மேட்டுப்பாளையம் அருகே, மின்சார வேலியில் சிக்கி, காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது, தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில்,…

சசிகலா விடுதலை தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில்

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவது, அதிமுகவில்…

வால்பாறையில் வனத்துறை முகாமை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை அருகே, வனத்துறை முகாமை யானைகள் தாக்கி சேதப்படுத்தின; அவற்றை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட்; இப்பகுதியில், ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு பகுதியில் நடமாடின.…

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக… சென்னை, தஞ்சை மாவட்டங்களில் மாற்றம்!.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை மற்றும் தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், அடுத்தாண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான…

Translate »
error: Content is protected !!