ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி பேசிய வீடியோ வைரலானது நரிக்குறவ மாணவிகளின் காணொலி வைரலானதையடுத்து, வீடியோ காலில் அழைத்துப் பேசியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் வந்தால் சாப்பாடு போடுவீங்களா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டதற்கு, கறி சோறு போடுவோம் என்று பதிலளித்திருந்தனர். மாணவியின் கோரிக்கையை ஏற்று வரும் 17 ஆம் தேதி நரிக்குறவ காலனிக்குச் சென்று உணவருந்த திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.