வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் சார்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 12 பேர் மருத்துவ குழுவினர் பணியில் இருப்பார்கள்.  இந்த நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். பின்பு  செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி மையம் துவக்கபட இருக்கிறது. இது குறித்து கேரளா அரசுடன் பேசியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முதல்வர் இது குறித்து அறிவிப்பார் எனவும், சபரிமலை செல்வோர் கண்டிப்பாக 2 தவனை கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும அல்லது 72மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும் எனவும், இதற்காக தமிழக அரசு சார்பில் சோதனை மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கல்லூரிகளில் வகுப்புகள் விரைவில் செயல்படும் எனவும்,  இந்து ஆன்மீக வகுப்புகள் துவங்குவது தொடர்பாக உயர்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது இந்த அனுமதி கடிதம் வந்தவுடன் வகுப்புகள் துவக்கப்படும் எனவும் கூறினார்.

கடந்த ஆட்சியில் அறங்காவலர் நியமனத்தை முறையாக செயல்படுத்தபடாததால் அதை சரி செய்து முறையாக அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் 28 நாடுகளில் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சென்னையை சிங்கப்பூர் ஆக்கி உள்ளோம் என தேர்தல் சமயத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்க்கு எதிர்மறையாக பருவமழைக்கு மாநகர் தத்தளிக்கின்றது எனவும், கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதிகள் எங்கே ? இதற்கு பதில் இல்லை எனவும், இதன் காரணமாக வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான் எனவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!