குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உடலுக்கு டெல்லி கன்டோன்மென்ட்டில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எல்.எஸ்.லிட்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.