58-ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக திமுக நகர்மன்ற தலைவர் பதவி பெரும்பான்மையோடு கைப்பற்றியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சியாக இருந்தபோது ஒரு முறை கூட திமுகவினர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி வகிக்கவில்லை. ஆனால் 58- ஆண்டுகளுக்கு பிறகு பேரூராட்சியாக இருந்த உளுந்தூர்பேட்டையை தற்போதைய அரசு நகராட்சியாக அறிவித்தது. அதன்பின்னர் 18 வார்டுகள் 24 வார்டுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்த நகராட்சி கவுன்சிலர்கள் உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, விசிக, தேமுதிக, பாமக, பாஜக, தேமுதிக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின்களும், சுயேட்சை வேட்பாளர்கள் என 96 வேட்பாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில் நகராட்சியில் மட்டுமே மொத்த வாக்காளர்கள் 19 ஆயிரத்து 808 உள்ளனர். நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக அதிக வார்டு கவுன்சிலர்கள் உறுப்பினர் பதவியை திமுக பெரும்பான்மையோடு கைப்பற்றியது குறிப்பிடதக்கது.