முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

முன்னாள் பாஜக மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா டெல்லியில் நேற்று இரவு காலமானார்.அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி,

‘சந்தன் மித்ரா’ ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக அவர் புகழ் சேர்த்தார். வரலாறு பற்றிய அவரது புரிதல் ஆழமானது. அவரது மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி,

‘சந்தன் மித்ரா’ தனது புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவுக்காக நினைவுகூரப்படுவார். அவர் அரசியல் மற்றும் ஊடக உலகில் தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!