காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையின் அடையாளமாக உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை எனது தொகுதியில் இருப்பது பெருமைக்குறியது. புற்றுநோய் சிகிச்சையில் தமிழகத்திற்கே அடையாளமாக இருக்கிறது இந்த மருத்துவமனை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.