முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்ய எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் வெளியிடப்படவில்லை, மக்கள் பணம் குடுத்து எந்த ஒரு படிவமும் வாங்கி ஏமாற வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை மற்றும் குறைகளை தெரிவிக்க வெறும் வெள்ளை தாள் இருந்தால் மட்டும் போதும் எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இணையதளம் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவு துறைக்கு மனுக்களை அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.