பெருமாள் கோவிலில் நகைகள் கொள்ளை

 

ஓமலூர் அருகே  பனங்காடு சென்றாய பெருமாள் கோவிலில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பல லட்சம் மதிப்பிலான சுவாமி நகைகள் கொள்ளை ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா பச்சனம்பட்டி கிராமம், பனங்காட்டில்மிகவும் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு அர்ச்சகர் முரளி வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இன்று மாலை பூஜைகள் செய்வதற்காக மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் மேற்கூரை ஓடுகள் மற்றும் மூலவர் அறை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் அறையில் சுவாமியின் ஆபரணம் வைக்கப்பட்டிருந்த  இரும்பு பெட்டி மற்றும் உற்சவர் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம், கிரீடம், தங்காசுகள், மற்றும் வெள்ளி பொருட்கள் சுமார் 30 பவுன், தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் 9000 மற்றும் சென்றாய பெருமாள் அணிந்திருந்த வெள்ளி கிரீடம், உற்சவர் தாயார் கழுத்தில் கிடந்த தங்க திருமாங்கல்யம்  ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் ஓமலூர் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கோவில் மேற்கூரை ஓட்டை பிரித்து மூலவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இரும்பு பெட்டியில் இருந்த பணம் மற்றும் சுவாமி நகையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!