கர்நாடகாவில் நடந்து முடிந்த 115 உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதன்படி, நகரசபைகளில் பா.ஜனதா-67, காங்கிரஸ் -61, ஜனதா தளம் (எஸ்) -12, சுயேச்சைகள் -26, பேரூராட்சி தேர்தலில் பா.ஜனதா-176, காங்கிரஸ் -201, ஜனதா தளம் -12, சுயேச்சைகள் -43, பட்டண பஞ்சாயத்து. பா.ஜனதா-194, காங்கிரஸ்-236, ஜனதா தளம் (எஸ்) -12, சுயேச்சைகள்-135 இடங்களை வென்றுள்ளன.