இமாச்சலில் மலையேற சென்ற 17 பேர் மாயம்?

இமாச்சல பிரதேசத்தில் 17 மலையேற்ற வீரர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டின் உத்தரகாசியை ஒட்டியுள்ள ஹர்ஷில் என்னும் பகுதியில் இருந்து 17 பேர் கொண்ட மலையேற்ற குழு கடந்த 14 ஆம் தேதி பயணத்தை தொடங்கியது. இமாச்சல பிரதேசத்தில் கின்னூர் மாவட்டத்தை ஹர்ஷில் என்னும் பகுதியுடன் இணைக்கும் பாதையான லம்காகா மலைதொடர் வழியாக இக்குழு பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 17 பேர் அடங்கிய குழு காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை தேடி காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளை கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!