காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு முழுவதும் பெய்த பனிப்பொழிவு காரணமாக பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகல் சாலையை மூட ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அப்பகுதி முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வழுக்கும் நிலையில் உள்ளது. அதனால், சாலை மூடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தற்போது ‘சில்லைக் காலன்’ என அழைக்கப்படும் 40 நாள் கடுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது. கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த குளிர்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வரை நீடிக்கும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.