சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக்கொடி தினமும் காலையில் ஏற்றப்பட்டு மாலை இறக்கப்படுவது வழக்கமாக பின்பற்றபட்டு வருகிறது.
நேற்று இரவு முதலே சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், தலைமைச் செயலகத்தில் இன்று காலை இயற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி மழை மற்றும் காற்றினால் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து சேதமடைந்த தேசியக்கொடியை ராணுவ அதிகாரிகள் மாற்றினார்கள். அதன்பின் மறுபடியும் சேதமடைந்த தேசியக்கொடி கொடிக்கம்பத்தில் மாற்றப்பட்டது. எனினும் பிற்பகலுக்கு பின்னர் மழை குறைந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மூன்றாவது முறையாக தேசியக்கொடி சேதமடைந்து உள்ளது.