நெல்லை ரெட்டியார்பட்டி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேரும், கார் ஓட்டுநர் என 3 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மற்றொரு மாணவி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் காரின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.