சோளிங்கர், வடலூர், திருக்கோவிலூர் மற்றும் நீலகிரி மாவட்டம் – கூடலூர் ஆகிய நகரங்களுக்கு முழுமைத் திட்டங்கள் இல்லை எனவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், புராதன தொன்மையினை பாதுகாக்கவும், திட்டமிட்ட வளர்ச்சியினை உறுதிப்படுத்த முழுமைத் திட்டங்கள் தயாரிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆகையால், அதனை செயல்படுத்தும் விதமாக, நகர திட்டமிடல் துறை இயக்குனர், சோளிங்கர் நகராட்சியை, உள்ளூர் திட்டமிடல் பகுதி என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை பரிசீலித்து, சோளிங்கர் பகுதியை உள்ளூர் பகுதியாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.