பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கிய அமரீந்தர்-பாஜக கூட்டணி, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “முதல்- மந்திரி சன்னி தலைமையிலான அரசு மிகவும் பலவீனமான அரசாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளன. பஞ்சாபில் வலுவான ஆட்சி தேவை. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வலுவான ஆட்சியை அமைத்து, இது போன்ற குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தண்டிக்கும்” என்றார்.