கார்த்திகை திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு – நிலக்கோட்டை பூச்சந்தை, திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூச்சந்தை தென் தமிழகத்திலே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். குறிப்பாக நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 40% அதிகமாக பூ சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையில் விளைவிக்கப்படுகின்றன மல்லிகை பூக்கள் அனைத்தும் மதுரை மல்லி என்று அழைக்கப்படுகின்றது.

மல்லிகை-2200 கனகாம்பரம்-ரூ.1500, செவ்வந்தி – ரூ.400, சம்மங்கி- ரூ.500, அரளி – ரூ.200 மற்றும் வாடாமல்லி – ரூ.150 ,கோழிக்கொண்டை- ரூ.200 உள்ளிட்ட  பூக்கள்  கிலோ ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தளர்வுகளுக்கு பிறகு திருக்கார்த்திகை தீபம்  கொண்டாடப்படுவதால் மக்கள் கார்த்திகை திருநாளை கொண்டாடுவதற்காக ஆர்வம் காட்டி வருவதின் எதிரொலியே இன்றையதினம் பூக்களின் விலை அதிகரிப்பின் காரணமென கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் வெளியூர் சில்லரை வியாபாரிகள் மார்கெட்டில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆகையால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!