காதலன் இறந்ததை தாங்கமுடியாமல் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காதலன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடபுதுப்பட்டியை சேர்ந்த ரமணா என்ற நபரும், அதே பகுதியை சேர்ந்த 11ஆம் படிக்கும் மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக மனமுடைந்த காதலன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. காதலன் இறந்ததால், அந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!